அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் இணைந்து நடிக்கும் `தண்டகாரண்யம்’ |``Thandakaaranyam'' co-starring Attakathi Dinesh and Kalaiyarasan

  மாலை மலர்
அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் இணைந்து நடிக்கும் `தண்டகாரண்யம்’ |``Thandakaaranyam costarring Attakathi Dinesh and Kalaiyarasan

2019 ஆம் ஆண்டு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியானது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.இதைத்தொடர்ந்து அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. அதில் கலையரசன் சிகப்பு கொடியை பிடித்தவாறு இருக்கிறார். தண்டகாரண்யம் என்றால் ராமாயண இதிகாசத்தில் உள்ள காட்டின் பெயராகும். இப்படம் தீவிரவாதத்தையும் , காட்டை சம்மந்தப்பட்ட கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தின் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் கெத்து என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார். இதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு மக்கள் மனதில் கூடியுள்ளது.ஒரு நாட்டை பாதுகாக்க வெறும் துப்பாக்கி பீரங்கி அணுகுண்டுகளாலமட்டுமே முடியாது... ??Presenting you the #Thandakaaranyam First Look | #தண்டகாரண்யம் முதல் பார்வை ?A film by @AthiraiAthiyanA @justin_tunes Musical @officialneelam @LearnNteachprod @KalaiActor @Dineshoffical… pic.twitter.com/wx2OlekHYVஉங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை